வெள்ளி, 23 அக்டோபர், 2020

இலை, தழை, கீரை விளக்கம்

.
*ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்* 
*‘இலை’என்று பெயர்.*
 
*அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை*
 *‘கீரை’ ஆகின்றது.*

 *மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப்*
 *‘பூண்டு’ என்று பெயர்*

 *அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்*
 *‘புல்’ ஆகின்றன.*

 *மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்* 
*‘தழை’.* 

*நெல், வரகு முதலியவற்றின் இலைகள்* 
*‘தாள்’ ஆகும்.*

 *சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்* 
*‘மடல்’.*

 *கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘*
*தோகை’ என்றாகின்றது.* 

*தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள்* 
*‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன.* 

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல,
 தாவரவியல் அறிவியலும் 
அடங்கி இருக்கிறது.

- கட்செவி வழியாக பெற்றது