வியாழன், 29 ஜூலை, 2021

கரும்பின் மரபணு மாற்றத்தை சரி செய்யும் "கிரிஸ்பர்"

 

மிகவும் சிக்கலான மரபணு அமைப்பைக் கொண்டது கரும்புஎனவேகரும்பு ரகங்களை கலப்பு செய்துநமக்கு வேண்டாத கூறுகளை நீக்கிவேண்டிய அம்சங்களை மட்டும் கொண்ட புதிய ரகங்களை உருவாக்குவது கடினம்அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

எனவேதான், 'கிரிஸ்பர்என்ற மரபணு திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பில் வீரிய ஒட்டு ரகத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்பிரபலமான மரபணு திருத்த கருவியான கிரிஸ்பரைகரும்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது இதுவே முதல் முறைஅமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்கரும்பின் தோற்றத்தில் இரண்டு மாற்றங்களை உருவாக்க முடிகிறதா என்று ஆராய்ந்தனர்.

இதன் மூலம் கிரிஸ்பர் தொழில்நுட்பம்கரும்பின் மரபணுவைதுல்லியமாக கையாள உதவுகிறதா என்று அறிவதே அவர்களது நோக்கம்அண்மையில் அந்த இரு ஆய்வுகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.முதல் ஆய்வில்கரும்புத் தோகையின் நிறத்தை வெளிர் பச்சை நிறத்திற்கு மாற்றுவதில் புளோரிடா விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர்இதன் மூலம்குறைவான உரங்களை உள்வாங்கிநிறைய எடையை கொடுக்கும் கரும்பு கிடைத்தது.

இரண்டாவது ஆய்வில்கிரிஸ்பர் தொழில்நுட்பம் மூலம்குறைவான பூச்சி மருந்து தேவைப்படும் விதத்தில் மாற்ற முடியுமா என சோதித்தனர்.அதிலும் திட்டவட்டமான வெற்றி கிடைத்துள்ளதுகரும்புப் பயிருக்காக காடுகள் அழிக்கப்படுவது முதல்அறுவடைக்குப பிறகு தோகை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது வரை பல சூழியல் கேடுகளுக்கு கரும்பு காரணமாக இருக்கிறதுஎனவேகிரிஸ்பர் மூலம் அந்த குறைகளை போக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.