புதன், 12 நவம்பர், 2014

திருந்திய நெல் சாகுபடி

  
கேள்வி - பதில் 
“திருந்திய நெல் சாகுபடி  முறை” என்றால் என்ன?
நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் 
கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம்
 போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் 
மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் 
கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக 
வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது.
திருந்திய நெல் சாகுபடியில் ஏற்படும் நன்மைகள் யாவை?
 • இள நாற்றை நடுவதால் சடுதியில் நிலைகொண்டு, நடவு அதிர்ச்சி இல்லாமல் 
 • வளரத்துவங்குகிறது.
 • வேர்களின் வளர்ச்சி  அதிகமாகிறது
 • அதிக தூர்கள் வெடிக்கின்றன
 • இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிச்சேர்க்கை கடைசி வரை 
 • நன்றாக இருக்கிறது.
திருந்திய நெல் சாகுபடி முறைக்குத் தேவையான விதை அளவு என்ன?
ஏக்கருக்கு 2 - 3 கிலோ விதை போதுமானது
திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதில் உள்ள நுட்பங்கள் என்னென்ன?
 • ஒரு குத்துக்கு 1 நாற்று
 • முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நோக்காமலும் ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது.
 • 25 X 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும்
 • சதுர நடவு செய்வதற்கு அடையாளமிட்ட கயிறையோ (அ) நடவு அடையாளக் 
 • கருவியையோ பயன்படுத்தலாம்.
திருந்திய நெல் சாகுபடியில் நீர்ப்பாசன முறையைப் பற்றி சற்று கூறுங்களேன்?
 • பொதுவாக மண் மேல் நீரைத்தேக்கி வைக்காமல் ஆனால் மண் ஈரமாக இருக்குமாறு 
 • செய்ய வேண்டும்
 • நட்டதிலிருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக்கட்டடி பின்
 •  அது வடிந்து லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு
 •  நீரைப்பாய்ச்சுதல் வேண்டும்.
 • தண்டு உருளம் பருவத்திற்குப் பின் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக்கட்டி பின் மண்ணின்
 •  மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுதல்
 •  வேண்டும்.
 • காய்ச்சலும், பாய்ச்சலும் போன்ற இந்த நீர்ப்பாசன முறையால் மண்ணில் காற்றோட்டம் 
 • இருக்கும்
 • வேர்களின் பணியும், நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.
திருந்திய நெல் சாகுபடியில் களைகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
  • நட்டத்திலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக் கருவியை (மொத்தம் 3 -4 தடவை) 
  • குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்
  • ஒரு தடவை உபயோகிக்க ஏக்கருக்கு 3 ஆள் தேவைப்படும்
  • களைக்கருவியை உபயோகிக்கும்போது களைகள் மண்ணில் அமுக்கி 
  • விடப்படுகின்றன. இதனால் களைச் செடிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 
  • ஊட்டச்சத்துக்கள் மண்ணிற்கே திரும்புகின்றன.
  • களைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் களைக்கருவி 
  • உபயோகிப்பதால் ஏற்படும் முக்கிய பயன், மண் கிளறிவிடப்படுவதாகும். 
  • இதனால் ஏற்படும் பெளதீக, இரசாயன, நுண்ணுயிரியல் மாற்றங்கள் செடிகளின் 
  • வளர்ச்சியில் பெறும் முன்னேற்றத்தைத் தருகின்றன.
   

  ஞாயிறு, 9 நவம்பர், 2014

  பத்மஸ்ரீ டாக்டர் விவசாயி!


               
  புதுச்சேரியில் - கூடப்பாக்கத்தில் உள்ள விவசாயி வெங்கடபதி (ரெட்டியார்). விவசாயத்தில் குறிப்பாகத் தோட்டக்கலையில் முதன்முறையாக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.  பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 30.8.2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்று பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட்ட விழா மலரைப் பெற்றுக்கொண்டவர்.
  அவருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவியல் துறைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தனது மய்யத்துக்கு வருகைதர வேண்டும் என வெங்கடபதி விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2.8.2014 அன்று நேரில் சென்று ஆசிரியர் கி.வீரமணி பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

  உண்மைக்காக நேரம் ஒதுக்கி உரையாடிய வெங்கடபதியார், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையில் தன்னால் ஆன அனைத்தும் செய்வதாகக் கூறினார். இனி அவருடன்...


  உண்மை: எப்படி மலர் சாகுபடிக்கு வந்தீர்கள்?
  வெங்: நான் என் தந்தையுடன் இளம் வயதிலேயே விவசாயத் தொழில் செய்துவந்தேன். வேறு தொழில் எனக்குத் தெரியாது. நான் படித்ததும் நான்காம் வகுப்பு மட்டுமே. விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் விவசாயத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அதன்பின்னர் மனதைத் தேற்றிக்கொண்டு ஏற்கெனவே எனக்குப் பழக்கம் உள்ளவரான வேளாண்மைத்துறை அதிகாரி, முன்பு புதுச்சேரியில் பணியாற்றியவர்.
  அவரைத் தேடிப்போய்ப் பார்த்தேன். அவர் மலர்ச் சாகுபடி செய்யுமாறு என்னிடம் கூறினார். சரி என்று திரும்பி வந்தேன். என்னிடம் பணம் இல்லை. என் மனைவியிடம் கேட்டால் தருவாரோ இல்லையோ என்று அவரிடம் கூறாமலே அவருடைய வளையல்களை எடுத்துச்சென்று, அந்தப் பணத்தில்தான் கனகாம்பரச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். பூ என்ன கொடுத்துவிடும் என்று அதில் பணத்தைப் போடுகிறீர்கள் என்றும் கேட்டார்கள். விடாமுயற்சியுடன் மலர்ச்சாகுபடியில் ஈடுபட்டேன். ஏனென்றால், பூ நல்ல விஷேசத்துக்கும் உள்ளது. கெட்டதுக்கும் உள்ளது. பெண்கள் விரும்பிச் சூடிக்கொள்ளும் பூ விவசாயத்தையே செய்வது என்று தீர்மானித்துக்கொண்டேன். விவசாயத்துறையில் உள்ளவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி செய்து வந்தேன்.
  உண்மை: கனகாம்பரம் மலர்ச் சாகுபடியில் என்ன புதுமை செய்தீர்கள்?
  வெங்: பூ விவசாயத்தில் அதிக லாபம் வருவதைக் கண்டேன். நிறைய உற்பத்தி செய்தபோது வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்காமல் இருந்தார்கள். அதனால், நானே விற்பனை செய்வதற்கு ஆள்களை வைத்து விற்பனை செய்தேன். ஒரே நிறமாக இருக்கிறதே என்று பூவின் நிறத்தில் மாற்றம் செய்தேன். வெவ்வேறு நிறங்களில் பூக்கும்படியாக செய்தேன். அப்படிச் செய்தபோது பூச்செடிகளைக் கேட்டு வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். லட்சுமிநாராயணா நர்சரி என்று ஆரம்பித்து செடிகளைக் கொடுக்கத் தொடங்கினேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இலவசமாகவே செடிகளைக் கொடுத்தேன். இப்போது கனகாம்பரத்தில் மட்டும் அப்துல் கலாம் மாடலில் இருந்து நூறு வகையான கனகாம்பரச் செடிகளை உருவாக்கியுள்ளேன்.
  உண்மை: இப்படிச் செய்வதற்கு யாரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள்?
  வெங்: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அரசு விவசாயக் கல்லூரிக்குச் சென்று முதுகலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதைக் கண்டேன். அவர்கள் கூறிய தகவல்களை நானே செய்து பார்க்கத் தொடங்கினேன். அந்தப் பேராசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு அதன்படிச் செய்து வந்தேன்.
  உண்மை: லட்சுமி நாராயணா நர்சரியிலிருந்து நீங்கள் கொடுக்கும் அத்தனை செடிகளும் நன்றாக வளருகின்றனவா? அதற்கு என்ன செய்கிறீர்கள்?
  வெங்: செடிகள் வளருவதற்குச் சரியான தட்ப வெப்பத்தைப் பராமரித்து வருகிறேன். ஈரப்பதம் சீராக இருப்பதால் அது நல்லபடியாக வளர்ந்து கைகொடுத்துள்ளது. என்னிடம் ஒரு இலையைக் கொடுத்தால் போதும், அதிலிருந்து நூறுவகைகளை உருவாக்குவேன். நான் கொடுக்கும் செடிகள் நோய் இல்லாதவையாக இருக்கும். பூச்சித் தொல்லை இருக்காது. அப்படி ஒரு ஏற்பாட்டை நாற்று வளரும்போதே செய்துவிடுவேன்.
  உண்மை: அது என்ன ஏற்பாடு? வெங்: செடிகளுக்கான நாற்றை வளர்க்கும் பகுதியை முற்றிலுமாக மூடிவிடுவேன். அதனால், வெளியிலிருந்து பூச்சிகளோ, நோய்த் தொற்றோ ஏற்படாதவண்ணம் பாதுகாக்கப்படுகிறது. சிறு துளைகள்மூலம் பீய்ச்சி அடிக்கும் நீரானது கீழே தரைக்குச் செல்லாமல் அப்படியே இலைகளால் உறிஞ்சப்படுகிறது. மூடிய அமைப்பால் வெப்பமாக இருக்கும். வெப்பத்தைத் தணிக்க சிறு துளைகள் கொண்ட குழாய் அமைப்புகள்மூலம் தண்ணீர் தெளிக்கப்படும்போது வெப்பமடைந்த அந்த கூண்டுப் பகுதியாக உள்ள பகுதியில் இதமான சில்லிப்பு ஏற்படும். வெளிக்காற்றோ, வெளி வெப்பமோ இன்றி பாதுகாக்கப்படுகிறது. இதை இசுரேல் தொழில்நுட்பம் என்று கூறுகிறார்களாம்.
  உண்மை: கனகாம்பரம் சாகுபடிபோல் வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
  வெங்: ரோஜாச் செடியில் முள்ளே இல்லாத ரோஜாச் செடியை உருவாக்கி உள்ளேன். பச்சை மிளகாய் செடியை புதுவிதமாக உருவாக்கி உள்ளேன்.
  உண்மை: பச்சை மிளகாயில் என்ன புதுவிதம்?
  வெங்: நெய் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு நெய் வாசம் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், மருத்துவர்கள் கொழுப்பு இல்லாமல் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நெய் மிளகாய் செடி வகையை அறிமுகப்படுத்துகிறேன். இது டிஸ்கவரி தாவரமாகும். அந்த மிளகாயைச் சமைத்த உணவில் நெய்வாசம் வரும்படியாக உருவாக்கி உள்ளேன்.
                                                  
  உண்மை: வேறு என்ன புதிதாகச் செய்திருக்கிறீர்கள்?
  வெங்: சவுக்கு நாற்றை உருவாக்கிக் கொடுத்துவருகிறேன். சவுக்கு வளரும் இடத்தைப் பார்த்தீர்கள் என்றால், அது கடலோரத்தில் உள்ள உப்புக் காற்றில் வளர்வதாக இருக்கிறது. அப்படி உப்பு நீர் உள்ள மற்ற பயிர்களுக்குத் தோதாக இல்லாத நிலத்தில் சவுக்கை நட்டால் நல்ல பலன் தரும் என்று எடுத்துச் சொல்லித் தருகிறேன். ஏக்கருக்கு, குறிப்பிட்ட காலத்தில், அதிக அளவில் கூடுதலாக சாகுபடி தருவதை உறுதி அளித்து நாற்றுகளை அளித்து வருகிறேன்.
  உண்மை: இன்னும் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
  வெங்: கொய்யா ஹைபிரிட் வகையை உருவாக்கி உள்ளேன். அதிக எடையுள்ள கொய்யாவை உற்பத்தி செய்கிறேன். தண்டுக்கீரை வகையில் தண்டுகளில் நார் இல்லாமல் உருவாக்கி உள்ளேன்.  வெற்றிலைக்கொடி வகைகளை உருவாக்கி உள்ளேன்.
  உண்மை: குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரக்கூடியதுதானே வெற்றிலை போன்றவை?
  வெங்: குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரக் கூடியவைகளை, எல்லாப் பகுதிக்கும் ஏற்றவகையில் வளரச் செய்யக் கூடிய தொழில்நுட்பம்தான் அறிவியலில் சாதனை. அறிவியலால்தான் என்னால் செய்ய முடிகிறது.
  உண்மை: அறிவியல் முறைப்படி எப்படிச் செய்கிறீர்கள்?
  வெங்: காற்றில் உள்ள ஈரப்பதத்தை ((ph அளவை) குறிப்பிட்ட விகிதத்தில் வைத்து நாற்றுகளைப் பராமரிப்பதற்கு அறிவியல் பயன்படுகிறது. மூடிய அமைப்பாக ஏற்படுத்தியுள்ளதன் செயலும் அறிவியலே. திசுக்கள் வளர்ப்பு முறையும் அறிவியல்தான். செடிகளை ஒரே இனத்திலிருந்து பலவகைகளாக உருவாக்கப் பயன்படுவதும் அறிவியல் தொழில்நுட்பம்தான்.
  உண்மை: நீங்கள் ஒருவரே இவ்வளவையும் செய்கிறீர்களா?
  வெங்: இல்லை. நான் மட்டுமே இல்லை. என் மனைவி, சிறிய வயதிலிருந்தே என் மகள் எனக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
  உண்மை: இன்னும் யாரெல்லாம் உதவி உள்ளார்கள்?
  வெங்: முதலில் நான் நன்றி கூற வேண்டியது இந்தியன் வங்கிக்கு. அவர்கள் என்னை அதிக அளவில் ஊக்கப்படுத்தி உள்ளார்கள். இந்திய அரசு, புதுச்சேரி அரசு என்னுடைய அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
  உண்மை: ஊக்கப்படுத்தியவர்கள் என்று உள்ளவர்கள்?

  வெங்: மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் என்னை ஊக்கப்படுத்தினார். மேனாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாடீல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கினார். இன்னும் பலரும் பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளனர்.  என்னுடைய அனுபவத்தை விவசாயம் பயிலும் பெரியகுளம், கோயம்புத்தூர் மற்றும் கடலூர் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு பாடமாக சொல்லித்தர தமிழ்நாடு அரசின் விவசாயத் துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ளார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அய்யா அவர்கள் என்னை _ என் பணிகளைப் பாராட்டி அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள். ஊக்கத்துடன் பயணத்தைத் தொடர்கிறார் பத்மசிறீ டாக்டர் விவசாயி.
  நேர்காணல் : செஞ்சி கதிரவன்
  உண்மை இதழ், 2014  ஆகஸ்ட் 16-31

  திசு வளர்ப்பு மய்யம்

   

  விவசாயப் புரட்சியாளர் பத்மசிறீ, முனைவர் வேங்கடபதியின் திசு வளர்ப்பு மய்யம் தமிழர் தலைவர் பாராட்டு

  செவ்வாய், 05 ஆகஸ்ட் 2014 15:31 விடுதலை
  புதுச்சேரி, ஆக.5_ பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் அறிவியல் துறைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயப்புரட்சியாளர்  வேங்கடபதி (ரெட்டியார்) பெற்றுள்ளார். பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் வேங் கடபதி அவர்களை அடை யாளம் கண்டு பாராட்டும் வகையில் அறிவியல் மதிப்புறு முனைவர் பட்டத் தை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தி உள் ளார்கள். 30-8-2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார் பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கருத்துக்காட்சியில் பங் கேற்று விழா மலரை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட பத்மசிறீ விருது பெற்ற முதல் தோட்டக்கலை வித்த கராக வேங்கடபதி விழா மலரைப் பெற்றுக்கொண் டார். வேங்கடபதி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவருடைய லட்சுமிநாரா யணா திசு வளர்ப்பு மய் யத்துக்கு 2.-8.-2014 அன்று நேரில் சென்று பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி பார்வையிட்டு பாராட்டுக் களைத் தெரிவித்தார். மோகனா வீரமணி, துணை வேந்தர் நல்.இராமச் சந்திரன், ஜெர்மன் கொ லோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் யுல்ரிக், பல் கலைக்கழகத்தின் வேளாண்பிரிவு பேராசிரி யர்கள் குமரன், பாண்டியன், திருச்சி பெரியார் மாளிகை தங்காத்தாள், பெரியார் வீரவிளையாட்டுக் குழுத் தலைவர் ப.சுப்பிரமணியம், புதுவை திராவிடர்கழக மாநிலத்தலைவர் சிவ.வீரமணி, மண்டலத் தலைவர் ராஜி, மண்டல மகளிரணித்தலைவர் விலாசினி ராஜி, திண்டி வனம் மாவட்டத் தலைவர் க.மு.தாஸ், மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை உட்பட பலர் உடன் இருந்தனர்.
  கனிவான விருந்தோம்பல்
  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, பயனாடை அணிவித்து எனது 65 ஆண்டுகாலத்தில் சிறப்பு விருந்தினராக வேந்தர் வருகை உள்ள தாகத் தெரிவித்த வேங்கட பதியும், அவர் வாழ் விணையர் விஜயாள், மகள் சிறீலட்சுமியும் அன்புடன் உபசரித்தனர். பகல் உணவு அளித்ததுடன் அனை வரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று நாற்றுகள் வளர்ப்பு, திசு வளர்ப்பு மற்றும் பிற பணிகள்குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள். அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சீருடையான கருப்பு சட்டைத்துணி யுடன், வெள்ளை வேட்டி யையும் அளித்து தோட் டத்தில் விளைவித்த அளவில் பெரிதான கொய் யாக்கனிகளை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்கள்.
  பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட நாற்றுகள்
  லட்சுமிநாராயணா திசு வளர்ப்பு மய்யத்தின்மூலம் தோட்டப்பயிர்கள், மலர்ச் செடிகள், சவுக்கு உள் ளிட்ட பல வகைகளுக்கும் உரிய பாதுகாப்புடன் நோய்த்தாக்காத நாற்று களை வழங்கிவருகிறார். பூச்சிகள் தாக்காமல், தா வரங்களில் நோய்த்தொற் றுகள் இல்லாதவாறு நாற்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு அளித்து வருகிறார். விவசாயத்தின் வித்தகராக உள்ள வேங்க டபதி கூறும்போது, நாற் றுகளுக்கு இங்கிருக்கும் வரை பாதுகாப்புதான். அதையே விவசாயிகள் வாங்கிச்செல்லும்போது, அவர்கள் நிலத்தின் தன் மைக்கேற்ப உணவுப் பொருட்களாக இருந்தால் இயற்கை உரங்களையும், பிறவற்றிற்கு இரசாயன உரங்களையும் பயன்படுத்தி பாதுகாக்கலாம் என்று கூறுகிறார்.
  வியக்கதகு உருவாக்கம்
  நீர்வளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் நீர் உப்பு நீராகவே இருந் தாலும் சவுக்கு போன்ற வற்றை சாகுபடி செய்யலாம் என்று கூறுகிறார். கனகாம்பரம் மலர்ச் செடியில்மட்டும் நூறு வகைகளை உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். அதேபோன்று உணவில் நெய் பயன்படுத்துபவர்கள் பழக்கத்தில் நெய்வாசனை விரும்புவார்கள், ஆனால், கொழுப்பு ஆகாது என் பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்காக நெய்வாசனையுடன் உள்ள மிளகாய் உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். ரோஜாச் செடியில் முள் ளில்லாத ரோஜாச் செடி யை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தாவரத்தின் இலையிலும் சிறு அளவு இருந்தால் போதும், அதிலிருந்து பல வகைகளை உருவாக்கிவிட லாம் என்கிறார்.
  குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாகுபடி செய் யக்கூடிய வாய்ப்புள்ள தாவர வகைகளையும் ஆய்ந்து, வெற்றிலைக்கொடி உள்ளிட்டவற்றையும் மற்ற பகுதிகளிலும் சாகுபடி செய்யக்கூடிய தொழில் நுட்பம்தான் அறிவியலில் சாதனை என்று கூறுகிறார். தாவரவியலில்  சாத னைக்கு கல்வி ஒரு தடையே இல்லை. தாவரவியலில் அருஞ்சாதனை படைத் துள்ள விவசாயத்தின் வித்தகராக வேங்கடபதி (ரெட்டியார்) உள்ளார்.  புதுச்சேரியில் உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கல்விபயின்ற வேங்கடபதி (ரெட்டியார்) தன்னுடைய தொடர் முயற்சி, அயராத உழைப் பின் மூலம் விவசாய பட்டதாரிகளே வியக்கத் தக்க சிகரத்தை எட்டியுள் ளார் என்றால் அது மிகையல்ல. தோட்டக் கலையில் முதல்முறையாக பத்மசிறீ விருது பெற்றவர் வேங்கடபதி ஆவார்.
  லட்சுமி நாராயணா திசுக்கள் வளர்ப்பு மய்யம்
  அவர் செடிகள் வளர்ப்பு, சவுக்கு, முள் இல்லாத ரோஜா, கனகாம்பரம், வெற்றிலைக் கொடி, நெய் மிளகாய், மலர் சாகுபடி, கொய்யா என்று எந்த தோட்டப்பயிர் எடுத்துக்கொண்டாலும் அதில் சாதனை படைக்கும் ஆற்றலைக் கொண்டுள் ளவராக வேங்கடபதி சாதனை படைத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவர் வாழ்விணையர் விஜயாள், மகள் சிறீ லட்சுமி உள்ளனர். லட் சுமி நாராயணா  Lakshmi Narayana Tissue Culture [LNTC] என்கிற பெயரில் திசுக்கள் வளர்ப்பு மய்யம் ஆய்வுச் சாலையாக, தோட்டக் கலைத்துறையில் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, தாவரங் களுக்கான நாற்றுகள் உரிய தட்ப வெப்பத்தைப் பரா மரிக்கும் அமைப்பு ஆகிய முறைகளில் நோய்த் தொற்றுகள், பூச்சிகள் இவை ஏதுமின்றி நவீன முறையில் வளர்த்து, குறுகிய காலத்தில் அதிக சாகுபடியை செய்யும் வகையில், அறிவியல் ரீதி யாக (குரோமோசோம் களில்) மாற்றங்கள் செய்து, பலவகைகளாக தோட்டப் பயிர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் பயணித் துள்ள செலவழித்த காலம், தொலைவுகள் ஏராளம். டில்லி கனகாம்பரம் என்கிற பெயருள்ள மலர்ச் செடியில் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு ஏராளமான வகைகளில் பல நிறங்களில் கனகாம் பரம் மலர் சாகுபடியைச் செய்து அனைவரின் கவனத் தையும் ஈர்த்துள்ளார்.
  புதுவை மற்றும் இந்திய அரசு மற்றும் இந்தியன் வங்கியின் ஒத்துழைப்பு உள்ளதாக பெருமிதத் துடன் கூறுகிறார். அவர் மகள் சிறீலட்சுமி சிறுவய திலிருந்து மிகுந்த ஆர்வத் துடன் இத்துறையில் ஈடுபட்டுவருவதும் குறிப் பிடத்தக்கது. அவர்வாழ் விணையராக உள்ள விஜயாள் அவருடைய முயற்சியில் பெரும்பங்கு வகிப்பதாக வேங்கடபதி கூறுகிறார்.
  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம்
  வேங்கடபதி தோட்ட கலையில் முதல் பத்மசிறீ விருது பெற்றவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருந் தாலும், அய்யங்களுக்கு மிக எளிமையாக பதில் கூறு கிறார்.

  1972ஆம்  ஆண்டு முதல் தோட்டக்கலையில் பெரும் ஆர்வத்துடன் களம் இறங்கிய வேங்கட பதியை நாடி விருதுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற மைகுறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ள தாகக்கூறும் அவர் பல் கலைக்கழகத்துக்கு தன் னால் ஆன அனைத்தும் செய்வதாகக்கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு மரத்தின் மதிப்பு!


  50 ஆண்டுகள் வரை வாழும் சாதா ரண மரம் தன் ஆயுள் காலத்தில் ரூ.50 
  லட்சம் அளவுக்கு நமக்குச் சேவை செய்கிறது.
  மரம் வெளி யிடும் உயிர்வளி (ஆக்ஸிஜன்) மதிப்பு ரூ.8.3 லட்சம்.
  ஒரு மரம் மறுசுழற்சியின் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்கும் மதிப்பு 
  ரூ.9.4 லட்சம்.
  மண் அரிப்பை தடுப்பதால் நமக்கு ஏற்படும் லாபம் ரூ.9.5 லட்சம்.
  மரம் தூய்மையாக்கும் காற்றை நாம் தூய்மையாக்க முற்பட்டால் ஆகும் 
  செலவு ரூ.14.5 லட்சம்.
  மரநிழலில் தங்கும் பறவை, விலங் குகளுக்கு அச்சேவையை நாம் 
  வழங்கினால் ஆகும் செலவு ரூ.8.3 லட்சம்.
  இவற்றுடன் மலர்களையும், கனிகளை யும் நமக்கு வழங்குகிறது.
  எனவே ஒரு மரம் வெட்டப்படும் போது நமக்கு ஏற்படும் இழப்பு ரூ.50 லட்சம்
  தொகுப்பு: இரா. பசுபதிராஜன்,

  தலைமையாசிரியர்; பண்டசோழநல்லூர்

  விடுதலை,18.10.14

  வியாழன், 6 நவம்பர், 2014

  வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம்


  வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுமற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகள்மற்றும் தாவரங்களின் (பயிர்கள்)உற்பத்தியைக் கொண்டுநாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலானநீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல்,மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.
  மனித சமூகங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளன. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில்நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர்செய்ய நீர்ப்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப வேளாண்மைமுறை மேலோங்கியதால் "ஓரினச் சாகுபடி" (monoculture) பரவலாகியுள்ளது.
  எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "நிலைகொள் வேளாண்மை" (permaculture) மற்றும் "உயிரி வேளாண்மை" (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது வேளாண் அறிவியல் எனப்படுகிறது. வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பதுதோட்டக்கலை எனப்படுகிறது.

  வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்


  மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர்எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.