வியாழன், 22 பிப்ரவரி, 2024

2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்


விடுதலை நாளேடு

 ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

♦ முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு
♦ விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு!
2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சென்னை,பிப்.20- தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (19.2.2024) “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ் கனவுகள்’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று (20.2.2024) 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் பெருமக்களை அரவ ணைக்கும் நிதிநிலை அறிக்கையாக இன்று தாக்கல் செய் யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

ரூ.16,500 கோடிக்கு பயிர்க் கடன்

2024 – 2025ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு, பூக்கள், பழங்கள், வேளாண் இயந்திரங்கள், விதைகள், வேளாண் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகள், கசிவுநீர் குட்டை, புதிய குளங்கள் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பனை விதைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மின் இணைப்புக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக மின்வாரியத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சிக்கு ரூ.110.59 கோடி

வறட்சி தணிப்பிற்கான சிறப்புத் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்.
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு.
தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப் பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
‘மண்ணுயிர் காப்போம்’ திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.
இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க
100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்.
‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளுக்கு
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
“முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம்” கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆடுதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.240 கோடி ஒதுக்கீடு
பயிற்சிபெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு.
‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கு உகந்த ‘மா’ இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
பன்னாட்டுத் தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு

நீரிழிவு நோயைக் கட்டப்படுத்த….

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

கிராம வேளாண் முன்னேற்றக் குழு

2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு உருவாக்கிட ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.
மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

மரவள்ளிப்பயிரில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.
ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
டெல்டா வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.