ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஒரே செடியில் இந்த அதிசயம்

சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 காய்களை விளை வித்து புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை-மகள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த கூடப்பாக் கத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடபதி. இவர், விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து, கனகாம்பரம் பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி உள்ளார்.
இப்போது அனைத்து நிலங்களுக்கும் ஏற்ற வகையிலான சவுக்கு ரகங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறார். சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில் பல்வேறு புதிய ரகங்களை உருவாக் கிக் கொண்டே இருக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பங் களை கற்றுக் கொண்டு, அதைச் செயல்படுத்துகிறார்.
இவரது சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை டில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் வழிமுறைகளும், ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவரது விவசாய சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மசிறீ விருதும் வழங்கி உள்ளது.
ஒரே செடியில் 3 காய்கள்: அணுக்கதிர் வீச்சு மூலம் செடிகளை உருவாக்கி வரும் வெங்கடபதி, இதற்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குச் சென்று நவீன ரக செடி வகைகளை உருவாக்கி வருகிறார். தற்போது சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்துள்ளார். கலாம் கத்தரி, மோடி மிளகாய், சோனியா தக்காளி என அவற்றுக்கு பெயரிட்டுள்ளார்.
கத்தரி செடியின் ஆயுள் காலம் 6 மாதம். மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் தாக்கி வேர்கள் அழுகி செடிகள் இறக்கின்றன. 6 மாத கத்தரி செடியில் இதன் மகசூல் 4 முதல் 8 கிலோ மட்டும் கிடைக்கும். இதனால் இவற்றை நவீன ரக ஆய்வின் மூலம் உருவாக்கி உள்ளார்.
தந்தைக்கு உதவும் மகள்: இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் 7 வயது முதலே தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தரியை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து வேங்கடபதி, அவரது மகள் சிறீலட்சுமி ஆகியோர் கூறியதாவது:
சுண்டக்காயில் பல வகைகள் உள்ளன. முதலில் ஜப்பான், கொரியா, நாடுகளில் தான் இதன் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் காய்க்கும் இனத்தில் வேர்ச் செடியாக வைத்து கத்தரி செடிகளை ஒட்டுமுறையில் வளர்க்கின்றனர்.
இதற்காக சுண்டைக்காய் செடியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காமா கதிர்வீச்சு செலுத்தி சோதித்தபோது, காய் காய்க்காத இனம் உருவாகியது. இதில் செடிகள் வீரியமாக வளர்கின்றன. அவற்றில் கத்தரி இனத்தை ஒட்டு வைத்து பார்த்த போது, மிக வேகமாக வளர்ந்தன. இதன் மூலம் 6 மாதங்களில் 12 முதல் 18 கிலோ வரை காய்கள் கிடைத்தன.
இவற்றின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வேர்ச் செடி ஆதலால் எந்த நோயும் தாக்காது. மேலும் காய்க்காத சுண்டைக்காய் செடியில் ஒட்டு முறையில் 3 விதமான காய்கள் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்து சோதனை செய்துள்ளோம். இவை மூன்றும் ஒரே வகையான குடும்பம் என்பதால் 3 இனங்களும் சுண்டைக் காயில் ஒட்டி வளர்கிறது.
காய்கள் காய்க்காத சுண்டைக்காய் இனத்தை நாங்கள் வடிவமைத் துள்ளோம். அதன் சக்தி செடிகள் வளர்வதற்கே பயன்படுகிறது எனத் தெரிவித்தனர்.
-விடுதலை ஞா.ம.,19.3.16

புதன், 9 நவம்பர், 2016

கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகள்

👉அன்பு நண்பர்களே...
கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகளை தெரிந்து கொள்ளலாமே...?!!!!!
👉கர்நாடகத்தில் வாழும் விவசாயி அல்லாத எந்த ஒரு தனி மனிதரும் விவசாய நிலம் வாங்க முடியாது.
👉கர்நாடகத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும்,எத்தனை கோடிக்கு வேண்டுமானாலும்,
யார் வேண்டுமானாலும் விவசாய நிலம் தவிர்த்து பிற சொத்துக்களை வாங்கலாம்.
👉ஒரு விவசாயி மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.
👉விவசாயிகளுக்கு RTC என்கிற சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் ரூ பத்து செலுத்தி,
கிராமத்தின் பெயர்,
சர்வே எண்,
நில உரிமையாளர் பெயர் கூறினால் கர்நாடக அரசுவின் முத்திரையோடு கிடைத்து விடும்.
👉யார் பெயரில் RTC இருக்கிறதோ அவர் பெயரில் மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.வாரிசுகளோ,
மனைவியோ,அம்மா,
அப்பா கூட எனது உறவு என்று கூறி விவசாய நிலம் வாங்க முடியாது.
👉தமிழகத்தில் இருந்து ஒருவர் சென்று கர்நாடகத்தில் விவசாய நிலம் வாங்க முடியுமா?
வாங்க முடியும்...!!!
தமிழகத்தில் அவர் பெயரில் விவசாய நிலம் உள்ளது என சர்வே எண்ணுடன் வட்டாட்சியரிடம் சான்றிதழ் வாங்கி கொடுத்தால் போதும்..
👉அவர் தமிழரோ,
மலையாளியோ,
தெலுங்கரோ,
வடஇந்தியரோ யாராக இருந்தாலும் அவர் விவசாயியாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் கன்னடர் என்ற தகுதி மட்டுமே சான்றாகாது.
👉கம்பெனி பெயரிலோ,
கூட்டமைப்பு பெயரிலோ,
சொஸைட்டிகள் பெயரிலோ விவசாய நிலம் வாங்க இயலாது.
தனி நபர்கள் பெயரில் மட்டுமே வாங்க முடியும்.
👉கர்நாடகத்தில் ஒரு நபர் திடீரென விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்பட்டால் என்ன செய்வது?
இதற்கு முன்பு விவசாயக் கூலியாக இருந்தால் வீ ஏ ஓ விடம் சான்றிதழ் வாங்கி வாங்க இயலும்.
👉ஆண்டு வருமானம் 2 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.
👉கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 இலட்சம் வரை வருமானம் வருபவர்களும் நிலம் வாங்கலாம் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
👉கிராமத்தில் கூட மனையாக வாங்க முடியாது.வீடாக
வாங்கலாம்.
பஞ்சாயத்து களோ
நகராட்சி,
மாநகராட்சிகளோ மட்டுமே விவசாய நிலத்தை வாங்கி  நகர்களை உருவாக்க முடியும்..
👉~~~~மிக மிக முக்கியமான செய்தி~~~~
கர்நாடகத்தில் எந்த ஒரு தனி மனிதரும் நிலம் வாங்கி மனை போட்டு விற்பனை செய்ய முடியாது.
👉வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் குறைந்த பட்சம் 500 நபர்களின் சொஸைட்டி உறுப்பினர்கள்
பட்டியல் கொடுத்தால்
RTC உள்ள நபர்கள் பெயரில் விவசாய நிலத்தை வாங்கி Urban Development Authority மூலம் ஒப்புதல் பெற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டு மனை விநியோகம் செய்யலாம்.விற்பனை செய்யக் கூடாது..!!
👉ஒரு நகர் அமைக்க வேண்டுமெனில்,
அரசுக்கும் இலவயமாக இடம் ஒதுக்கி கொடுத்து பூங்கா,சாலைகள்,
வணிக வளாகங்கள் மற்றும் எதிர்கால கட்டமைப்புக்காக Civic Amenities இட ஒதுக்கீடு செய்தால் தான் கர்நாடகத்தில் அந்த நகர் அங்கீகரிக்கப்பட்ட நகர் ஆகும்.
👉ஒரு ஏக்கர் 43,560 சதுர அடி.இதில் கர்நாடக அரசு சட்டப்படி தோராயமாக 20,000 சதுர அடி தான் மனையாக விற்பனை செய்ய முடியும்.
👉தமிழகத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இன்னும் இரண்டு தலைமுறைக்கு தேவையான வீட்டு மனைகள் விவசாய நிலங்களை தமிழகம்  வாழ் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்து மனைகள் ஒதுக்கி வண்ண வண்ண கொடிகள் பறந்து கொண்டுள்ளது.
👉கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை களாகட்டும்,மாநில சாலைகளிலோ
வீட்டு மனை ஒதுக்கியிருப்பதை எங்கேயும் பார்த்திருக்க முடியாது.
தார் சாலை கண்டவிடமெல்லாம் சென்னைக்கு மிக அருகாமையில்....
விழுப்புரம் வரை விற்று விட்டனர்...
இனி ஆண்டவர்கள்[!!!]
தான் காப்பாற்ற வேண்டும்..

அரிமா.கு.புகழேந்தி
இயற்கை விவசாயி,
மைசூரு.