ஞாயிறு, 9 நவம்பர், 2014

திசு வளர்ப்பு மய்யம்

 

விவசாயப் புரட்சியாளர் பத்மசிறீ, முனைவர் வேங்கடபதியின் திசு வளர்ப்பு மய்யம் தமிழர் தலைவர் பாராட்டு

செவ்வாய், 05 ஆகஸ்ட் 2014 15:31 விடுதலை
புதுச்சேரி, ஆக.5_ பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் அறிவியல் துறைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயப்புரட்சியாளர்  வேங்கடபதி (ரெட்டியார்) பெற்றுள்ளார். பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் வேங் கடபதி அவர்களை அடை யாளம் கண்டு பாராட்டும் வகையில் அறிவியல் மதிப்புறு முனைவர் பட்டத் தை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தி உள் ளார்கள். 30-8-2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார் பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கருத்துக்காட்சியில் பங் கேற்று விழா மலரை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட பத்மசிறீ விருது பெற்ற முதல் தோட்டக்கலை வித்த கராக வேங்கடபதி விழா மலரைப் பெற்றுக்கொண் டார். வேங்கடபதி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவருடைய லட்சுமிநாரா யணா திசு வளர்ப்பு மய் யத்துக்கு 2.-8.-2014 அன்று நேரில் சென்று பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி பார்வையிட்டு பாராட்டுக் களைத் தெரிவித்தார். மோகனா வீரமணி, துணை வேந்தர் நல்.இராமச் சந்திரன், ஜெர்மன் கொ லோன் பல்கலைக்கழகப் பேராசிரியர் யுல்ரிக், பல் கலைக்கழகத்தின் வேளாண்பிரிவு பேராசிரி யர்கள் குமரன், பாண்டியன், திருச்சி பெரியார் மாளிகை தங்காத்தாள், பெரியார் வீரவிளையாட்டுக் குழுத் தலைவர் ப.சுப்பிரமணியம், புதுவை திராவிடர்கழக மாநிலத்தலைவர் சிவ.வீரமணி, மண்டலத் தலைவர் ராஜி, மண்டல மகளிரணித்தலைவர் விலாசினி ராஜி, திண்டி வனம் மாவட்டத் தலைவர் க.மு.தாஸ், மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை உட்பட பலர் உடன் இருந்தனர்.
கனிவான விருந்தோம்பல்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, பயனாடை அணிவித்து எனது 65 ஆண்டுகாலத்தில் சிறப்பு விருந்தினராக வேந்தர் வருகை உள்ள தாகத் தெரிவித்த வேங்கட பதியும், அவர் வாழ் விணையர் விஜயாள், மகள் சிறீலட்சுமியும் அன்புடன் உபசரித்தனர். பகல் உணவு அளித்ததுடன் அனை வரையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று நாற்றுகள் வளர்ப்பு, திசு வளர்ப்பு மற்றும் பிற பணிகள்குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள். அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சீருடையான கருப்பு சட்டைத்துணி யுடன், வெள்ளை வேட்டி யையும் அளித்து தோட் டத்தில் விளைவித்த அளவில் பெரிதான கொய் யாக்கனிகளை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்கள்.
பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட நாற்றுகள்
லட்சுமிநாராயணா திசு வளர்ப்பு மய்யத்தின்மூலம் தோட்டப்பயிர்கள், மலர்ச் செடிகள், சவுக்கு உள் ளிட்ட பல வகைகளுக்கும் உரிய பாதுகாப்புடன் நோய்த்தாக்காத நாற்று களை வழங்கிவருகிறார். பூச்சிகள் தாக்காமல், தா வரங்களில் நோய்த்தொற் றுகள் இல்லாதவாறு நாற்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு அளித்து வருகிறார். விவசாயத்தின் வித்தகராக உள்ள வேங்க டபதி கூறும்போது, நாற் றுகளுக்கு இங்கிருக்கும் வரை பாதுகாப்புதான். அதையே விவசாயிகள் வாங்கிச்செல்லும்போது, அவர்கள் நிலத்தின் தன் மைக்கேற்ப உணவுப் பொருட்களாக இருந்தால் இயற்கை உரங்களையும், பிறவற்றிற்கு இரசாயன உரங்களையும் பயன்படுத்தி பாதுகாக்கலாம் என்று கூறுகிறார்.
வியக்கதகு உருவாக்கம்
நீர்வளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் நீர் உப்பு நீராகவே இருந் தாலும் சவுக்கு போன்ற வற்றை சாகுபடி செய்யலாம் என்று கூறுகிறார். கனகாம்பரம் மலர்ச் செடியில்மட்டும் நூறு வகைகளை உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். அதேபோன்று உணவில் நெய் பயன்படுத்துபவர்கள் பழக்கத்தில் நெய்வாசனை விரும்புவார்கள், ஆனால், கொழுப்பு ஆகாது என் பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்காக நெய்வாசனையுடன் உள்ள மிளகாய் உருவாக்கி உள்ளதாகக் கூறுகிறார். ரோஜாச் செடியில் முள் ளில்லாத ரோஜாச் செடி யை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தாவரத்தின் இலையிலும் சிறு அளவு இருந்தால் போதும், அதிலிருந்து பல வகைகளை உருவாக்கிவிட லாம் என்கிறார்.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாகுபடி செய் யக்கூடிய வாய்ப்புள்ள தாவர வகைகளையும் ஆய்ந்து, வெற்றிலைக்கொடி உள்ளிட்டவற்றையும் மற்ற பகுதிகளிலும் சாகுபடி செய்யக்கூடிய தொழில் நுட்பம்தான் அறிவியலில் சாதனை என்று கூறுகிறார். தாவரவியலில்  சாத னைக்கு கல்வி ஒரு தடையே இல்லை. தாவரவியலில் அருஞ்சாதனை படைத் துள்ள விவசாயத்தின் வித்தகராக வேங்கடபதி (ரெட்டியார்) உள்ளார்.  புதுச்சேரியில் உள்ள கூடப்பாக்கம் கிராமத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கல்விபயின்ற வேங்கடபதி (ரெட்டியார்) தன்னுடைய தொடர் முயற்சி, அயராத உழைப் பின் மூலம் விவசாய பட்டதாரிகளே வியக்கத் தக்க சிகரத்தை எட்டியுள் ளார் என்றால் அது மிகையல்ல. தோட்டக் கலையில் முதல்முறையாக பத்மசிறீ விருது பெற்றவர் வேங்கடபதி ஆவார்.
லட்சுமி நாராயணா திசுக்கள் வளர்ப்பு மய்யம்
அவர் செடிகள் வளர்ப்பு, சவுக்கு, முள் இல்லாத ரோஜா, கனகாம்பரம், வெற்றிலைக் கொடி, நெய் மிளகாய், மலர் சாகுபடி, கொய்யா என்று எந்த தோட்டப்பயிர் எடுத்துக்கொண்டாலும் அதில் சாதனை படைக்கும் ஆற்றலைக் கொண்டுள் ளவராக வேங்கடபதி சாதனை படைத்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவர் வாழ்விணையர் விஜயாள், மகள் சிறீ லட்சுமி உள்ளனர். லட் சுமி நாராயணா  Lakshmi Narayana Tissue Culture [LNTC] என்கிற பெயரில் திசுக்கள் வளர்ப்பு மய்யம் ஆய்வுச் சாலையாக, தோட்டக் கலைத்துறையில் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, தாவரங் களுக்கான நாற்றுகள் உரிய தட்ப வெப்பத்தைப் பரா மரிக்கும் அமைப்பு ஆகிய முறைகளில் நோய்த் தொற்றுகள், பூச்சிகள் இவை ஏதுமின்றி நவீன முறையில் வளர்த்து, குறுகிய காலத்தில் அதிக சாகுபடியை செய்யும் வகையில், அறிவியல் ரீதி யாக (குரோமோசோம் களில்) மாற்றங்கள் செய்து, பலவகைகளாக தோட்டப் பயிர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் பயணித் துள்ள செலவழித்த காலம், தொலைவுகள் ஏராளம். டில்லி கனகாம்பரம் என்கிற பெயருள்ள மலர்ச் செடியில் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு ஏராளமான வகைகளில் பல நிறங்களில் கனகாம் பரம் மலர் சாகுபடியைச் செய்து அனைவரின் கவனத் தையும் ஈர்த்துள்ளார்.
புதுவை மற்றும் இந்திய அரசு மற்றும் இந்தியன் வங்கியின் ஒத்துழைப்பு உள்ளதாக பெருமிதத் துடன் கூறுகிறார். அவர் மகள் சிறீலட்சுமி சிறுவய திலிருந்து மிகுந்த ஆர்வத் துடன் இத்துறையில் ஈடுபட்டுவருவதும் குறிப் பிடத்தக்கது. அவர்வாழ் விணையராக உள்ள விஜயாள் அவருடைய முயற்சியில் பெரும்பங்கு வகிப்பதாக வேங்கடபதி கூறுகிறார்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம்
வேங்கடபதி தோட்ட கலையில் முதல் பத்மசிறீ விருது பெற்றவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருந் தாலும், அய்யங்களுக்கு மிக எளிமையாக பதில் கூறு கிறார்.

1972ஆம்  ஆண்டு முதல் தோட்டக்கலையில் பெரும் ஆர்வத்துடன் களம் இறங்கிய வேங்கட பதியை நாடி விருதுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற மைகுறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ள தாகக்கூறும் அவர் பல் கலைக்கழகத்துக்கு தன் னால் ஆன அனைத்தும் செய்வதாகக்கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக