செவ்வாய், 26 ஜூலை, 2022

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி

ஞாயிறு, 29 மே, 2022

வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டுகோள்

வியாழன், 19 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

 

சனி, 1 ஜனவரி, 2022

3 வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

புதுடில்லி,நவ.30- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கியதுமக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்அதன்பின்மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுஅதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியதுஅப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டுகுறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று (29.11.2021) மக்களவை மீண்டும் கூடியதும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வகை செய்யும் ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’-அய் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்அவர் பேசும்போது, ‘‘அரசியல் ஆதாயத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனஇந்த சட்டங்களின் நன்மைகளை சில விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லைஎனவேவருத்தத்துடன் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயி கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுஇந்த விவ காரங்கள் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மசோதா குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்இதை அவைத் தலைவர் ஏற்கவில்லைமதியம் 12.06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதுஇதன் பிறகு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவை காலையில் கூடியதும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்இதன்காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதுபிற்பகலில் அவை கூடியதும் மதியம் 2 மணி அளவில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்இதை அவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லைமதியம் 2.15 மணிக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதுமசோதா நிறைவேறிய பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஅவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஅதன்பிறகு அரசாணை வெளியிடப்படும்இதன்மூலம் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரசு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேமக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

புதன், 29 செப்டம்பர், 2021

விவசாயிகளுக்காக, தமிழக அரசு சார்பில் சில இணையதளங்கள்

விவசாய தகவல்கள். 
பதிர்ந்து உதவுங்கள்...!

விவசாயிகளுக்காக, தமிழக அரசு சார்பில் சில இணையதளங்கள் இருப்பது இன்னமும், யாருக்கும் தெரியவில்லை. விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டிய, முக்கிய சில இணையதள முகவரிகளை (websites), இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரிகள்:
வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள
www.tnagrisnet.tn.gov.in
விவசாயத் தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnau.ac.in
தோட்டக்கலைப் பயர்கள் மற்றும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள
www.tnhorticulture.tn.gov.in
விதைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.seednet.gov.in
வேளாண்மைக்கு உதவும் எந்திரங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள
www.aed.tn.gov.in
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள
www.l3fpedia.com
அங்ககச் சான்று தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnocd.net
மேற்கண்ட இணையதள முகவரிகள், நிச்சயம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து இத்தகைய இணையதளங்களை கண்காணித்து வந்தால், நிகழ்காலத் திட்டங்கள் மற்றும் வேளாண்மை யுக்திகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் நன்றி!

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

பாராட்டுக்குரிய பெண் தொழில் முனைவோர்!


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கிராமப்புறத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து, இணையம் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பட்டதாரிப் பெண் ஒருவர் சம்பாதித்து சாதனை புரிந்து வருகிறார்.

தா.பழூர் அடுத்த கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு (34). எம்.எஸ்சி., பி.எட். முடித்துள்ள இவர், வணிகம் செய்து வரும் தீரன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு முன்பு வேலைக்குச் சென்ற அழகு, திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

வீட்டில் இருக்கும் நாம் ஏதாவது ஒரு கைத்தொழிலைச் செய்ய வேண்டும் என எண்ணிய அழகு, தா.பழுர் அடுத்த சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் வேளாண் அறிவியல் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து மண்புழு உரம் தயாரிக்கும் முறையைக் கற்றார்.

பின்னர், கணவரின் உதவியோடு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்க படுக்கை (பெட்), உரங்களை பாக்கெட் செய்ய சாக்குப் பைகள், தையல் போட இயந்திரம், மாட்டு எரு, மண் என, முக்கிய மூலப்பொருட்களை வாங்கிய அழகு, தனது வீட்டுத் தோட்டத்திலேயே மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளைக் கடந்த 2019 ஜூன் மாதம் தொடங்கினார்.

உரங்கள் உற்பத்தி செய்யத் தேவைப்படும் மண்புழுக்களை பெரம்பலூரில் உள்ள ஒரு மண்புழு உரம் உற்பத்தி செய்யும் பண்ணையில் வாங்கி வந்து, உரங்களைத் தயாரித்த அழகு, விற்பனை செய்ய இணைய  வர்த்தக நிறுவனமான அமேசானை நாடி அதன் இணையதளத்தில் மண்புழு உரத்தின் விவரத்தைப் பதிவு செய்தார்.

அன்று முதல் இன்று வரை அமேசான் மூலம் 1 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும், நேரடியாக வரும் விவசாயிகளுக்கும் 50 கிலோ வரையிலான மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அழகு கூறுகையில், "முதன்முதலில் மண்புழு உரம் தயாரித்தபோது, விற்பனை செய்வதில் சற்று சுணக்கம் காணப்பட்டது. அப்போது, வேளாண் அறிவியல் மய்ய அலுவலர்கள், விவசாயிகள் பலரிடமும் மண்புழு உரங்கள் குறித்தும், தன்னிடம் இருப்பது குறித்தும் தெரியப்படுத்தினேன். அதன்பின், விவசாயிகள் பலரும் தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு இந்த மண்புழு உரம் திடமான காய்கறிகளை நச்சுத்தன்மை இன்றித் தருகிறது. அதனால் மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்கள் பெரும்பாலும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ வாங்கினால் ரூ.15 எனவும், 25 கிலோவுக்கு மேல் வாங்கும் போது ரூ.12 எனவும் கொடுத்து வருகிறேன். தற்போது 4 ஆட்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு கூலி உட்பட அனைத்து செலவுகளும் போக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.

இது எனது குடும்பத்துக்குப் பெரும் உதவியாக உள்ளது. வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள் இதுபோன்ற சிறு சிறு கைத்தொழில்களைச் செய்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி அடையலாம். நான் உற்பத்தி செய்யும் மண்புழு உரத்தைப் பெற அமேசானில் https://amzn.to/340Qs54p என்ற இணைப்பிலும், 9585340007 என்ற எனது அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், மண்புழு தயாரிப்பது குறித்து பயிற்சியைத் தரத் தயாராகவும் உள்ளேன்" என்றார்.

கிராமப்பகுதியில் இருந்து மண்புழு உற்பத்தி செய்து அமேசான் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து சாதனை படைத்து வரும் அழகுவைப் பலரும் பாராட்டி வருகின்றனர். கிராமப்புறத்தில் இது சாத்தியமா எனக் கூறியவர்கள், தற்போது வியந்து நிற்கின்றனர்

வியாழன், 29 ஜூலை, 2021

கரும்பின் மரபணு மாற்றத்தை சரி செய்யும் "கிரிஸ்பர்"

 

மிகவும் சிக்கலான மரபணு அமைப்பைக் கொண்டது கரும்புஎனவேகரும்பு ரகங்களை கலப்பு செய்துநமக்கு வேண்டாத கூறுகளை நீக்கிவேண்டிய அம்சங்களை மட்டும் கொண்ட புதிய ரகங்களை உருவாக்குவது கடினம்அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

எனவேதான், 'கிரிஸ்பர்என்ற மரபணு திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பில் வீரிய ஒட்டு ரகத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்பிரபலமான மரபணு திருத்த கருவியான கிரிஸ்பரைகரும்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது இதுவே முதல் முறைஅமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்கரும்பின் தோற்றத்தில் இரண்டு மாற்றங்களை உருவாக்க முடிகிறதா என்று ஆராய்ந்தனர்.

இதன் மூலம் கிரிஸ்பர் தொழில்நுட்பம்கரும்பின் மரபணுவைதுல்லியமாக கையாள உதவுகிறதா என்று அறிவதே அவர்களது நோக்கம்அண்மையில் அந்த இரு ஆய்வுகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.முதல் ஆய்வில்கரும்புத் தோகையின் நிறத்தை வெளிர் பச்சை நிறத்திற்கு மாற்றுவதில் புளோரிடா விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர்இதன் மூலம்குறைவான உரங்களை உள்வாங்கிநிறைய எடையை கொடுக்கும் கரும்பு கிடைத்தது.

இரண்டாவது ஆய்வில்கிரிஸ்பர் தொழில்நுட்பம் மூலம்குறைவான பூச்சி மருந்து தேவைப்படும் விதத்தில் மாற்ற முடியுமா என சோதித்தனர்.அதிலும் திட்டவட்டமான வெற்றி கிடைத்துள்ளதுகரும்புப் பயிருக்காக காடுகள் அழிக்கப்படுவது முதல்அறுவடைக்குப பிறகு தோகை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவது வரை பல சூழியல் கேடுகளுக்கு கரும்பு காரணமாக இருக்கிறதுஎனவேகிரிஸ்பர் மூலம் அந்த குறைகளை போக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.