ஞாயிறு, 19 மார்ச், 2023

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

 

சென்னை மார்ச் 15-  வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார். 

ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதி கரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

2021-2022ஆ-ம் ஆண்டுக் கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண் புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து மண் வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளை பொருட்களின் தேவை அதி கரித்துள்ளதோடு விழிப்புணர் வும் அவசியமாகி உள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர் பான பணிகளை சிறப்பு கவனத் துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப் படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற் காக வேளாண்மை - உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக் கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதி முறைகள் உருவாக்கப்பட்டுள் ளன. அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு விவசாயிகள் இடையே அதி கரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன் பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

கொள்கையின் நோக்கம்: 

அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாது காத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பான, ஆரோக் கியமான மற்றும் சுற்றுச்சூழ லுக்கு உகந்த உணவை வழங் குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும். அங்கக சான் றளிப்பு முறைகள், நச்சுத் தன்மை பகுப்பாய்வு நெறி முறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய் யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், சந்தை ஆலோசனைகள், சான் றிதழ் ஆலோசனைகள் வழங் கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங் கக வேளாண்மை கொள்கை யின் நோக்கங்களாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 18 மார்ச், 2023

45 கிலோவில் காச்சில் கிழங்கு

 

அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிர தீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவு களாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையா மல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலோ இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த் துச் சென்றனர்.


செவ்வாய், 26 ஜூலை, 2022

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி

ஞாயிறு, 29 மே, 2022

வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டுகோள்

வியாழன், 19 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

 

சனி, 1 ஜனவரி, 2022

3 வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

புதுடில்லி,நவ.30- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கியது. மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்பின், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று (29.11.2021) மக்களவை மீண்டும் கூடியதும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வகை செய்யும் ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’-அய் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘அரசியல் ஆதாயத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்த சட்டங்களின் நன்மைகளை சில விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, வருத்தத்துடன் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயி கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவ காரங்கள் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மசோதா குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவர் ஏற்கவில்லை. மதியம் 12.06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவை காலையில் கூடியதும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும் மதியம் 2 மணி அளவில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லை. மதியம் 2.15 மணிக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறிய பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரசு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

புதன், 29 செப்டம்பர், 2021

விவசாயிகளுக்காக, தமிழக அரசு சார்பில் சில இணையதளங்கள்

விவசாய தகவல்கள். 
பதிர்ந்து உதவுங்கள்...!

விவசாயிகளுக்காக, தமிழக அரசு சார்பில் சில இணையதளங்கள் இருப்பது இன்னமும், யாருக்கும் தெரியவில்லை. விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டிய, முக்கிய சில இணையதள முகவரிகளை (websites), இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரிகள்:
வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள
www.tnagrisnet.tn.gov.in
விவசாயத் தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnau.ac.in
தோட்டக்கலைப் பயர்கள் மற்றும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள
www.tnhorticulture.tn.gov.in
விதைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.seednet.gov.in
வேளாண்மைக்கு உதவும் எந்திரங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள
www.aed.tn.gov.in
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள
www.l3fpedia.com
அங்ககச் சான்று தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள
www.tnocd.net
மேற்கண்ட இணையதள முகவரிகள், நிச்சயம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து இத்தகைய இணையதளங்களை கண்காணித்து வந்தால், நிகழ்காலத் திட்டங்கள் மற்றும் வேளாண்மை யுக்திகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் நன்றி!